/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சேமியா உப்புமாவில் பல்லி மாணவர்களுக்கு மயக்கம்
/
சேமியா உப்புமாவில் பல்லி மாணவர்களுக்கு மயக்கம்
ADDED : ஜன 30, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரணமல்லுார்: திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லுார் அடுத்த கெங்காபுரம் அரசு நடுநிலை பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், 25 மாணவ - மாணவியர், காலை சிற்றுண்டி திட்டத்தில் சாப்பிட்டு வருகின்றனர்.
நேற்று காலை, சேமியா உப்புமா வழங்கப்பட்டது. இதில், பல்லி இருந்தை பார்த்த மாணவர்கள், அதிர்ச்சியடைந்தனர். இதை கவனிக்காமல் உப்புமா சாப்பிட்ட, 15 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அவர்களுக்கு பெரணமல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.