/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தொழிலாளியை அடித்து கொன்றவர் கைது
/
தொழிலாளியை அடித்து கொன்றவர் கைது
ADDED : டிச 27, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கம்,:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த, தொழிலாளி வெங்கடேசன், 40. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகன், 42, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், நேற்று கலசப்பாக்கம் அடுத்த மாம்பாக்கம் காலனியில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில், வெங்கடேசன், முருகனை சரமாரி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கடலாடி போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர்.