/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலைக்கு சுற்றுலா வந்த ஜப்பான் பயணி மாயம்
/
தி.மலைக்கு சுற்றுலா வந்த ஜப்பான் பயணி மாயம்
ADDED : மே 29, 2024 08:37 PM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்டவர் கோவிலுக்கு வந்து, ரமணாஸ்ரமத்தில் தங்கியிருந்த, ஜப்பான் நாட்டுக்காரர் திடீரென மாயமானார்.
திருவண்ணாமலையிலுள்ள அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் அங்குள்ள ஆசிரமங்களுக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவ்வாறு வந்து, சில நாட்களுக்கு முன் ரமணாஸ்ரமத்தில் தங்கியிருந்தார், ஜப்பான் நாட்டின் டோச்சீகி பகுதியை சேர்ந்த சடோஷிமினெட்டா, 62.
இவர் கடந்த, 3ம் தேதி அறை எடுத்து தங்கினார். அங்கு அவரது உடமைகளை வைத்து விட்டு வெளியே சென்றவர், மீண்டும் திரும்பவில்லை.
சந்தேகமடைந்த ஆசிரம நிர்வாகத்தினர், திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று, அறையை உடைத்து சோதனை செய்ததில், ஜப்பான் மொழியிலும், ஆங்கிலத்திலும், 'என்னை யாரும் தேட வேண்டாம். அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலைக்கு செல்கிறேன்' என எழுதப்பட்டிருந்தது.
வனத்துறையினரும், போலீசாரும், மலைப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.