ADDED : ஜூலை 25, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கம்:மூதாட்டியை கொன்று, நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இளங்குன்னி கிராமத்தை சேர்ந்த ரத்னம் மனைவி புஷ்பா, 63. இவரது மகன், கணவர் இறந்து விட்டனர்.
மகள் திருமணமாகி அதே பகுதியில் தனியாக வசிக்கிறார். தனியாக வசித்த புஷ்பா, பசு மாடு வளர்த்து வந்தார். ஜூலை, 18ல் இவரது நிலத்தில் பசுமாட்டை மேய்க்க சென்றவர், மாலை வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடை ந்த அவரது மகள் வாசுமதி புகார் படி, மேல்செங்கம் போலீசார் விசாரித்தனர். நேற்று, அழுகிய நிலையில் புஷ்பாவின் சடலம், அவரது நிலத்தின் அருகே வனப்பகுதியில் கிடந்துள்ளது.
அவர் அணிந்திருந்த, 4.5 சவரன் நகையை கொள்ளையடித்தவர்கள், அவரை கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் சடலத்தை மீட்டு, விசாரிக்கின்றனர்.