/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கற்கால பாறை கீறல் ஓவியம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
/
கற்கால பாறை கீறல் ஓவியம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
கற்கால பாறை கீறல் ஓவியம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
கற்கால பாறை கீறல் ஓவியம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
ADDED : நவ 04, 2024 04:00 AM

செஞ்சி: செஞ்சி அருகே கற்கால பாறை கீறல் ஓவியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவரும், செஞ்சி அரசு கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சுதாகர் தலைமையில், தமிழ்த் துறை மாணவர்கள் முகில், ஈசாக் உள்ளிட்ட குழுவினர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வில், கற்கால பாறை கீறல் ஓவியம் இருப்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து சுதாகர் கூறியதாவது:
செஞ்சி பகுதிகளில் கற்கள் நிறைந்த மலைகள் நிறைய இருப்பதால் கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள், கற்கருவிகள், கற்கருவிகளை கூர் தீட்டும் இடங்கள் அதிக அளவில் உள்ளன.
கோணை கிராமத்தில் வயல்களுக்கு நடுவில் சுனையுடன் அமைந்துள்ள பாறையில் ஒரு மனிதனின் உருவம் கீறல் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. 1 அடி உயரம் உள்ள இந்த ஓவியத்தில் ஒரு கையை உயர்த்தியும் ஒரு கையை மேல்நோக்கியும் வரைந்துள்ளனர்.
இந்தவகை ஓவியங்கள் செஞ்சி பகுதியில் நெய்வாநத்தம், நல்லான்பிள்ளை பெற்றாள் பகுதியில் உள்ளன. அதே போன்று இந்த ஓவியமும் இருப்பதால் இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும், இதனைச் சுற்றி 100 மீட்டர் தூரத்தில் ஏராளமான கல்திட்டைகள், கல்வட்டங்கள் இருந்ததற்கான தடயங்கள் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. விவசாயப் பயன்பாட்டின் காரணமாக அவற்றை அழித்திருப்பது கள ஆய்வில்
கண்டறியப்பட்டது. இந்த பாறை ஓவியத்தை தமிழக அரசு பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.