/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
/
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
ADDED : அக் 07, 2025 08:31 PM
போளூர் : போளூரில், காதல் தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை புதுதெருவை சேர்ந்தவர் சிவா, 27. இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவர், போளூர் சிவராஜ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார். நேற்று முன்தினம் மாலை, காதல் ஜோடி தனியாக சந்தித்து பேசினர். இதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்தனர்.
பின், சிவா, போளூர் அருகே உள் பெரியகரம் சாலையில், பைக்கில் சென்ற போது, மூன்று பேர் கும்பல், சிவாவை வழி மறித்து, 'எங்க ஏரியா பெண்ணை, நீ எப்படி காதலிக்கலாம்' எனக் கூறி, சிவாவை சரமாரியாக தாக்கி, அரிவாளால் அவரது கை, கால் உடம்பு என பல இடங்களில் வெட்டி தப்பினர்.
பலத்த காயமடைந்த சிவா, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போளூர் போலீசார், போளூரை சேர்ந்த பெருமாள், 23, என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரை தேடுகின்றனர்.