/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி; கொட்டிய டீசலை பிடித்த மக்கள்
/
டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி; கொட்டிய டீசலை பிடித்த மக்கள்
டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி; கொட்டிய டீசலை பிடித்த மக்கள்
டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி; கொட்டிய டீசலை பிடித்த மக்கள்
ADDED : நவ 18, 2025 07:19 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மூதாட்டி மீது மோதிய டேங்கர் லாரி, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. லாரியில் இருந்து கொட்டிய டீசலை அப்பகுதி மக்கள் பிடித்து சென்றனர்.
சென்னையிலிருந்து, 14,000 லிட்டர் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி, திருவண்ணாமலை வழியாக, திருச்சி நோக்கி நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருவண்ணாமலை அடுத்த தென்னரசம்பட்டு கிராமம் அருகே, கனகாம்பரம், 70, என்ற மூதாட்டி சாலையை கடக்க முயன்ற போது, டேங்கர் லாரி அவர் மீது மோதி நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி கவிழ்ந்ததில், டேங்கரில் இருந்த டீசல், சாலையில் கொட்டியது.
இதை கேன் மற்றும் பாத்திரங்களில் பொதுமக்கள் பிடித்து சென்றனர். மேலும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி, டீசலை தங்களது வாகன டேங்கில் நிரப்பி சென்றனர். கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.