/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
போலீஸ் எஸ்.ஐ., கார் மோதி தொழிலாளி பலி; 4 பேர் காயம்
/
போலீஸ் எஸ்.ஐ., கார் மோதி தொழிலாளி பலி; 4 பேர் காயம்
போலீஸ் எஸ்.ஐ., கார் மோதி தொழிலாளி பலி; 4 பேர் காயம்
போலீஸ் எஸ்.ஐ., கார் மோதி தொழிலாளி பலி; 4 பேர் காயம்
ADDED : ஜன 02, 2025 11:48 PM
செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த விண்ணவனுாரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 45; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில், அப்பகுதியில் புதுச்சேரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக செங்கத்திலிருந்து - திருவண்ணாமலை நோக்கி சென்ற 'ஹூண்டாய்' கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கிருஷ்ணன் உட்பட ஐந்து பேர் மீது மோதியது. இதில், கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த 75 - 40 வயதுடைய ஆண், பெண் நான்கு பேர் படுகாயமடைந்து, செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பாச்சல் போலீசார் விசாரணை நடத்தியதில், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர், திருவண்ணாமலை டவுன் போலீசில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணராஜ், 55, என்பது தெரிந்தது. போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.

