/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலை கோயிலில் பிரதோஷ வழிபாடு
/
தி.மலை கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஆக 07, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர் பிறை பிரதோஷ பூஜை நடந்தது.
இதையொட்டி, கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம் அருகிலுள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், அபிஷேக பொடி, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.