/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தீயில் எரிந்த தனியார் பள்ளி பஸ்
/
தீயில் எரிந்த தனியார் பள்ளி பஸ்
ADDED : நவ 05, 2025 02:03 AM
சேலம், : சேலம், சூரமங்கலம், மல்லமூப்பம்பட்டியில் உள்ள, பழனியப்பா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு கடந்த, 2 மதியம், 2:00 மணிக்கு, ஒரு பஸ் தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து காவலாளி ராமசாமி தகவல்படி, சூரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. அதேநேரம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பஸ், சிறு சேதத்துடன் தப்பியது.
தொடர்ந்து பள்ளி தாளாளர் கலைச்செல்வி, நேற்று அளித்த புகார்படி, சூரமங்கமல் போலீசார், தடய அறிவியல் நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். முதல்கட்ட விசாரணையில் பஸ் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றியது தெரிந்தது. விடுமுறை நாளில், விபத்து நடந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

