/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
லாரி டிரைவரை கொன்ற மனைவிக்கு 'காப்பு'
/
லாரி டிரைவரை கொன்ற மனைவிக்கு 'காப்பு'
ADDED : நவ 20, 2025 02:09 AM

சேத்துப்பட்டு: லாரி டிரைவரை, உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், இடையங்கொளத்துாரை சேர்ந்தவர் விஜய், 28; லாரி டிரைவர். இவர், ஷர்மிளா, 24, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
லாரி டிரைவர் என்பதால், மாதத்தில், 15 முதல், 20 நாட்கள் வெளியூர் வேலைக்கு விஜய் சென்று விடுவார். அவர் திரும்பும் போது, அக்கம் பக்கத்தினர், அவரின் மனைவி ஷர்மிளாவின் நடத்தை குறித்து அவதுாறு பேசினர். இதனால் விஜய்க்கும், ஷர்மிளாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
ஷர்மிளா, அவரது தாய் ராணி பாத்திமா வீட்டிற்கு அடிக்கடி சென்று தங்கினார். நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஷர்மிளாவின் தாய் ராணி பாத்திமா, விஜய் வீட்டிற்கு சென்று, அவரை தட்டி கேட்டார்.
அப்போது, மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து, உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த விஜய் பலியானார். அதிர்ச்சியடைந்த இருவரும், விஜய் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போல ஜன்னலில் அவரை துாக்கு கயிற்றால் மாட்டி தொங்க விட்டு, நாடகமாடினர்.
சேத்துப்பட்டு போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து அவரை அடித்து கொன்றது தெரிந்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.

