/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கல்வீச்சு புகாரை விசாரிக்க சென்ற போலீசார் மீது கல்வீச்சால் பரபரப்பு

ADDED : நவ 02, 2025 02:16 AM
திருவண்ணாமலை: செய்யாறில் அடுத்தடுத்து, 8 வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டது குறித்து விசாரிக்க சென்ற போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, டாக்டர் அம்பேத்கர் நகரில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில், 8 வீடுகளின் மீது நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிஅளவில் அடுத்தடுத்து கற்கள் விழுந்தன.
இதனால், வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, மீண்டும் கற்கள் சாலைகளில் சரமாரியாக வந்து விழுந்தன. இதனால், அப்பகுதி மக்கள் பதற்றமடைந்தனர்.
தகவலறிந்த செய்யாறு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் விசாரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மீதும் கற்கள் வந்து விழுந்தன.
அதில், உடைந்த செங்கற்கள், சிமென்ட் கலவை பூசிய வேஸ்ட் கற்கள் இருந்தன. போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கற்களை வீசியது யார் என, கண்டு பிடிக்க முடியாத நிலையில் , செய்யாறு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.