/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது
/
ரூ.3,000 லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது
ADDED : மார் 07, 2024 02:09 AM
செங்கம், செங்கத்தில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு அனுமதி அளிக்க பயனாளியிடம், 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சமூக நல அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கருங்
காலிபாடியை சேர்ந்தவர் கூலித்
தொழிலாளி கேசவன், 30; இவர் மனைவி ஜெயா, 24; இவர்களுக்கு சிந்தனை, 4, கிருத்திகா, 2, என்ற, 2 பெண் குழந்தைகள். ஜெயா கடந்த, 2022 ஜூன், 6 ல் இ-சேவை மையம் சென்று, முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பித்தார். அந்த மனு குறித்து, எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காத நிலையில், பலமுறை, செங்கம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு, ஜெயா அலைந்தார். கடந்த, 1ம் தேதி ஜெயாவிற்கு சமூக நலத்துறை அலுவலகத்தில் இருந்து வந்த, மொபைல்போன் அழைப்பில், 4 ம் தேதி, அலுவலகம் வர கூறினர். அதன்படி சென்ற ஜெயா, செங்கம் சமூக நலத்துறை அலுவலர் ஜீவா, 45, என்பவரை சந்தித்து, அனைத்து ஆவணங்களையும் அளித்தார். அப்போது அலுவலர் ஜீவா, 5,000 ரூபாய் லஞ்சம் தர கேட்டதற்கு, அவ்வளவு தர வசதியில்லை என ஜெயா கூறினார். அதனால், 3,000 ரூபாய் கண்டிப்பாக தர அலுவலர் ஜீவா கூறினார்.
இது குறித்து ஜெயா, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 3,000 ரூபாயை நேற்று காலை, 11:00 மணியளவில், அலுவலகத்தில் இருந்த சமூக நல அலுவலர் ஜீவாவிடம் ஜெயா கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலர் ஜீவாவை கைது செய்தனர்.

