/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
உண்டியல் பணத்தை ராணுவத்துக்கு வழங்கி சிறப்பு
/
உண்டியல் பணத்தை ராணுவத்துக்கு வழங்கி சிறப்பு
ADDED : மே 10, 2025 01:54 AM
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி அடுத்த பல்லேரிப்பள்ளியை சேர்ந்தவர்கள் லட்சுமிபதி, பிரஷாந்தி தம்பதி. இவர்களுக்கு தேஜஸ்பதி, 6, ஆதித்யாபதி, 4, என இரு மகன்கள் உள்ளனர்.
தம்பதியர், தங்கள் பிள்ளைகளுக்கு தின்பண்டங்களுக்காக வழங்கும் சில்லரை காசுகளை, இருவரும் உண்டியலில் சேர்த்து வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீது பாக்., தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்திய ராணுவத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், சிறுவர்கள் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை பெற்றோருடன் வந்து, கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினர். அவர்களை பாராட்டிய கலெக்டர், சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கி பாராட்டினார்.