/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
வீட்டை விடுதியாக மாற்றி ஆள் பிடிக்கும் எஸ்.எஸ்.ஐ.,
/
வீட்டை விடுதியாக மாற்றி ஆள் பிடிக்கும் எஸ்.எஸ்.ஐ.,
வீட்டை விடுதியாக மாற்றி ஆள் பிடிக்கும் எஸ்.எஸ்.ஐ.,
வீட்டை விடுதியாக மாற்றி ஆள் பிடிக்கும் எஸ்.எஸ்.ஐ.,
ADDED : பிப் 16, 2024 01:49 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக உள்ளவர் ஜெயசித்ரா, 45. இவர், திருவண்ணாமலை, சிவராத்திரி மடம் தெருவிலுள்ள தன் வீட்டை, அனுமதி பெறாமல் விடுதியாக நடத்தி வருகிறார்.அவர், 10க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ள திருவண்ணாமலை வட ஒத்தவாடை தெருவிற்கு சென்று, விடுதியில் தங்க வருவோரை மடக்கி, தன் விடுதிக்கு அழைத்துச் செல்ல ஆட்களை வைத்து, தினமும் ஆள் பிடித்து வருகிறார்.
இதையறிந்த அப்பகுதி விடுதி உரிமையாளர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எஸ்.எஸ்.ஐ., ஜெயசித்ரா, போலீசாரை வரவழைத்து, விடுதி உரிமையாளர்களை மிரட்டும் தொனியில் பேசினார். ஆத்திரமடைந்த விடுதி உரிமையாளர் சங்கத்தினர், திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தனர். மேலும், எஸ்.பி., கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., கூறியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட இருந்த விடுதி உரிமையாளர்கள் அமைதி அடைந்தனர்.