/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மாணவி கர்ப்பம்: சித்தப்பா கைது
/
மாணவி கர்ப்பம்: சித்தப்பா கைது
ADDED : பிப் 13, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர், 37 வயது விவசாயி. இவர், சென்னையில் கேட்டரிங் கல்லுாரியில் படிக்கும், 17 வயது மாணவிக்கு, சித்தப்பா உறவு முறை ஆவார். மாணவிக்கு சில நாட்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டது.
அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள், மாணவி, 8 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து, மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோர், தண்டராம்பட்டு அனைத்த மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து, சிறுமியின் காமுக சித்தப்பாவை கைது செய்தனர்.