/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்; மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு

ADDED : டிச 03, 2024 10:22 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாறை, மண் சரிந்து, விபத்து நடந்த இடத்தில் சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே மலையிலிருந்த பாறை உருண்டதில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ஒரு வீட்டில், ராஜ்குமார், 32, அவர் மனைவி மீனா, 26, மகன் கவுதம், 9, மகள் இனியா, 7, உறவினர்களின் குழந்தைகளான மகா, 12, ரம்யா, 12, வினோதினி, 14, ஆகிய ஏழு பேர் மண்ணுக்கடியில் சிக்கினர். மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஐந்து உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில், உடல் பாகங்கள் பிய்ந்தவாறு கண்டெடுக்கப்பட்டன. இருவர் உடலை கண்டெடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மண் சரிவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இன்று (டிச.,03) பாறை, மண் சரிந்து, விபத்து நடந்த இடத்தில் சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணின் தரம், மண் சரிவுக்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இருவர் உடலை விரைவில் கண்டெடுக்குமாறு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, சாலை மறியலை கைவிட்டனர்.