/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
திருவண்ணாமலை விவசாயி ரேபிஸ் நோயால் உயிரிழப்பு
/
திருவண்ணாமலை விவசாயி ரேபிஸ் நோயால் உயிரிழப்பு
ADDED : அக் 10, 2025 09:42 PM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அக்., 8ம் தேதி ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு, புது சாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜான் ஆண்ட்ரூஸ், 48, என்பவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இது குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி ருவண்ணாமலை மாவட் டத்தில் நாய் கடியால் ஓராண்டில், 10,479 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில், மூவர் ரேபிஸ் நோய் பாதித்து இறந்துள் ளனர். ரேபிஸ் என்பது, வைரசால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் உயிர்க்கொல்லி நோய். நாய் கடித்த முதல் நாள் முதல், 20 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமா னாலும் ரேபிஸ் வெளிப்படலாம்.
அதிலிருந்து தற்காத்துக் கொள்ள, நாய் கடித்தால் பதற்றமடையாமல் கடித்த இடத்தை சுத்தமான தண்ணீர், சோப்பு போட்டு, 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக கழுவுவதன் மூலம் பாக்டீரியா, வைரஸ்களை நீக்க உதவும். உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை சென்று நாய்க்கடி தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.
தடுப்பூசி நான்கு தவணைகளாக அதாவது, நாய் கடித்த முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள் மற்றும் 28ம் நாள் செலுத்தப் படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.