/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
குடும்ப தகராறில் மைத்துனரை குத்தி கொன்ற மாமா கைது
/
குடும்ப தகராறில் மைத்துனரை குத்தி கொன்ற மாமா கைது
ADDED : அக் 15, 2025 12:30 AM

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அருகே குடும்ப தகராறில் மைத்துனரை குத்தி கொலை செய்த மாமாவை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சு.நல்லுாரை சேர்ந்தவர் ரமேஷ், 37; கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தியா, 28; இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக சந்தியா, கணவரை பிரிந்து, விழுப்புரம் மாவட்டம் எடப்பாளையத்தில் தாய் வீட்டில், மூன்று ஆண்டுகளாக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் எடப்பாளையம் வந்த ரமேஷ், மனைவி சந்தியாவிடம் பிரச்னை செய்தார். இந்நிலையில், நேற்று காலை சந்தியாவின் தம்பி சஞ்சீவி, 25; டி.குன்னத்துார் அருகே நின்றிருந்த ரமேஷை கண்டித்தார்.
இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ரமேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் சஞ்சீவியின் மார்பில் குத்தினார். இதில், அவர் உயிரிழந்தார். திருக்கோவிலுார் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.