/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மரத்தின் மீது பைக் மோதி மூன்று மாணவர்கள் பலி
/
மரத்தின் மீது பைக் மோதி மூன்று மாணவர்கள் பலி
ADDED : நவ 21, 2024 01:15 AM
மரத்தின் மீது பைக் மோதி
மூன்று மாணவர்கள் பலி
திருவண்ணாமலை, நவ. 21
திருவண்ணாமலை அருகே, மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 மாணவர்கள், 3 பேர் பலியாயினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம், 17, சின்ன ஒலைப்பாடியை சேர்ந்தவர் ராமன், 17, இசுக்கழி காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், 17; மூவரும், வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேநிலைப்பள்ளியில் பிளஸ் 2, படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, ஒரே பல்சர் பைக்கில், 6:00 மணியளவில், திருவண்ணாமலை விழுப்புரம் சாலையில், வேட்டவலத்திலிருந்து தளவாய் குளம் நோக்கி சென்றனர். வழியில், ஆவூர் கிராமம் அருகே, பைக் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியது.
இதில், முத்துலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். ராமன், ஜெகதீஷ் இருவரையும், வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராமன் இறந்தார். நேற்று அதிகாலை, ஜெகதீஷ் உயிரிழந்தார்.
===========