/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
முன் விரோதம் வாலிபர் கொலை இருவர் கைது
/
முன் விரோதம் வாலிபர் கொலை இருவர் கைது
ADDED : ஏப் 02, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை சேர்ந்தவர் ஜெமினி, 22. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சுனில்குமார், 19, கார்த்திக், 20, ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது.
மார்ச், 28ல் சுனில்குமார் சமாதானமடைவது போல பேசி, ஜெமினியை அழைத்து சென்றார். அப்போது, கார்த்திக்குடன் சேர்ந்து, அவரை கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை கால்வாயில் வீசி தப்பினர்.
வெகு நேரமாகியும் ஜெமினி வீட்டிற்கு வராததால், அவரது தந்தை, போலீசில் புகார் செய்தார். செய்யாறு போலீசார் விசாரித்து, சுனில்குமார், கார்த்தியை நேற்று கைது செய்து, ஜெமினி சடலத்தை மீட்டனர்.

