/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பட்டா மாற்றத்துக்கு இரவில் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது
/
பட்டா மாற்றத்துக்கு இரவில் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது
பட்டா மாற்றத்துக்கு இரவில் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது
பட்டா மாற்றத்துக்கு இரவில் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது
ADDED : ஜூலை 20, 2024 05:51 PM

வந்தவாசி : வந்தவாசியில் பட்டா மாற்றத்துக்கு, இரவில் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் கணேஷ், 47; சென்னை தனியார் நிறுவன ஊழியர். ஆலம்பூண்டி கிராமத்தில் கூட்டு பட்டவாக உள்ள தனது நிலத்துக்கு, தனிப்பட்டா கேட்டு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தார். பிறகு வந்தவாசி தாலுகா அலுவலக ஜமாபந்தியிலும் மனு அளித்தார். இந்நிலையில் கடந்த, 18ம் தேதி வி.ஏ.ஓ., பால்பாண்டியை சந்தித்து, பட்டா மாற்றம் குறித்து கேட்டார். லஞ்சமாக, 5,000 ரூபாய் கேட்டவர், 2,000 ரூபாய் முன்பணமாக கேட்டுள்ளார்.இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில், கணேஷ் புகார் செய்தார். போலீசார் கூறியபடி அன்றிரவு வி.ஏ.ஓ., பால்பாண்டி தங்கியுள்ள அறைக்கு சென்ற கணேஷ், 2,000 ரூபாயை கொடுத்தார். பால்பாண்டி பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையிலான போலீசார், வி.ஏ.ஓ.,வை கைது செய்தனர்.