/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
விஜய் கட்சி நிர்வாகி பணமோசடி: பாதிக்கப்பட்டோர் போராட்டம்
/
விஜய் கட்சி நிர்வாகி பணமோசடி: பாதிக்கப்பட்டோர் போராட்டம்
விஜய் கட்சி நிர்வாகி பணமோசடி: பாதிக்கப்பட்டோர் போராட்டம்
விஜய் கட்சி நிர்வாகி பணமோசடி: பாதிக்கப்பட்டோர் போராட்டம்
ADDED : மே 07, 2024 07:13 AM
ஆரணி : நடிகர் விஜய் கட்சி நிர்வாகி, பல கோடி ரூபாய், சீட்டு பண மோசடி செய்ததை கண்டித்து அவரது வீட்டுக்கு பூட்டு போட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தொகுதி தலைவரும், விஜய் ரசிகர் மன்ற நகர தலைவருமான முருகன், 36; இவர், அப்பகுதியில் பூக்கடை மற்றும் சீட்டு நடத்தி வருகிறார். ஆரணி டவுன் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர், இவரிடம் சீட்டு பணம் கட்டி வந்தனர். ஆனால் அவர், சீட்டு முதிர்ச்சி அடைந்த நிலையிலும், பணம் கட்டிய, 100க்கும் மேற்பட்டோருக்கு, பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்தார்.
பாதிக்கப்பட்டவர்கள், ஆரணி டவுன் போலீஸ் மற்றும் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள், நேற்று காலை ஆரணி டவுன் பள்ளிக்கூட தெருவிலுள்ள முருகன் வீட்டிற்கு பூட்டு போட்டு முற்றுகையிட்டனர். ஆரணி டவுன் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.