/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
காட்டுப்பன்றியை விரட்டும் ஒலிபெருக்கி 'டெக்னிக்' பெருக்கி
/
காட்டுப்பன்றியை விரட்டும் ஒலிபெருக்கி 'டெக்னிக்' பெருக்கி
காட்டுப்பன்றியை விரட்டும் ஒலிபெருக்கி 'டெக்னிக்' பெருக்கி
காட்டுப்பன்றியை விரட்டும் ஒலிபெருக்கி 'டெக்னிக்' பெருக்கி
ADDED : மார் 01, 2024 01:12 AM

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்களை, இரவில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வயலில் இறங்கி சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்த நிலையில், செய்யாறை அடுத்து தும்பை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ்பாபு, 40, தன், 9 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள நெல் பயிர், கரும்பு, மணிலா பயிரை காப்பாற்ற, நாய்கள் குரைப்பது போலவும், யானைகள் பிளிறுவது போலவும் ஒலிபெருக்கியை வயல் முழுதும் பொருத்தி, இரவில் இயக்குகிறார்.
இந்த சத்தம், 1 கி.மீ., துாரம் வரை கேட்கிறது. இதனால் காட்டுப்பன்றிகள், நாய் மற்றும் யானை கூட்டமாக உள்ளதாக கருதி, பயிர்களை சேதப்படுத்த வருவதில்லை.
இம்முறை வாயிலாக பயிர்கள் காப்பாற்றப்படுவதால், ராஜேஷ் பாபு நிம்மதி அடைந்துள்ளார். இந்த டெக்னிக்கை, மற்ற விவசாயிகளும் பின்பற்ற முடிவு செய்துள்ளனர்.

