/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி
/
நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி
ADDED : டிச 24, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மன்சூராபாதை சேர்ந்தவர் மலர், 42; கூலித்தொழிலாளி. நேற்று அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தில், இயந்திரத்தால் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரின் சேலை, நெல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நிலையில், அவரும் இயந்திரத்தில் சிக்கி பலியானார். மங்கலம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

