ADDED : ஜன 03, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த விண்ணவனுாரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணன், 45. இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில் அப்பகுதியில் புதுச்சேரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக செங்கத்திலிருந்து - திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது மோதியது. இதில், கிருஷ்ணன் பலியானார்.
கோபால் 75, அஞ்சலை60, கிருஷ்ணமூர்த்தி 43, பவானி 40, படுகாயமடைந்தனர்.