ADDED : மார் 05, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பள்ளத்துார் அருகே கங்காளி குப்பத்தை சேர்ந்தவர் மாயவன், 48; கூலித்தொழிலாளி. இவர், கந்தம்பாளையம் அருகே, ஆவாரங்காடு புதுார் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.