ADDED : மே 25, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி வடக்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசியதாவது:
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மிக உயரமான கருணாநிதி சிலையை இங்கு நிறுவ வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் உள்ள, 2,000 கிராமங்களில் அவரது சிலை அமைக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.

