/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மாணவி எரித்து கொலை: போலீஸ் விசாரணை
/
மாணவி எரித்து கொலை: போலீஸ் விசாரணை
ADDED : நவ 01, 2025 03:08 AM
திருச்சி: திருச்சி அருகே, வனப்பகுதியில் கல்லுாரி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி வயலுார் சாலையில் உள்ள சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின், 22. இவர், சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள புனித வளனார் கல்லுாரியில் எம்.எஸ்சி., படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கிளம்பிய மீரா, வேலைக்கான இன்டர்வியூ செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை; மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து, திருச்சி அரசு மருத்து வமனை போலீஸ் ஸ்டேஷனில் மாணவியின் பெற்றோர் புகார் அ ளித்தனர். புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவரது மொபைல் போன் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் வனப்பகுதியில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனையிட்டபோது, அங்கு மாணவி மீரா உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

