/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அடைப்புக் கட்டை உடைந்ததால் 2வது நாளாக நடந்த தேரோட்டம்
/
அடைப்புக் கட்டை உடைந்ததால் 2வது நாளாக நடந்த தேரோட்டம்
அடைப்புக் கட்டை உடைந்ததால் 2வது நாளாக நடந்த தேரோட்டம்
அடைப்புக் கட்டை உடைந்ததால் 2வது நாளாக நடந்த தேரோட்டம்
ADDED : ஏப் 23, 2024 08:21 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் திருப்பைஞீலியில் உள்ள நீள் நெடுங்கண் நாயகி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். திருமண தடை நீக்கும் இந்த திருத்தலத்தில், சித்திரை தேரோட்டம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் நீலிவனேஸ்வரர் அம்பாளுடன் எருந்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு துவங்கியது. தெற்கு ரத வீதியில் தேர் இழுத்துச் செல்லப்பட்ட போது, சோலார் விளக்கு கம்பத்தில் தேர் மோதியது. இளைஞர்கள் கம்பத்தை வளைத்து, 30 நிமிடங்களுக்கு பின், தேரை தொடர்ந்து இழுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து, பக்தர்கள் தேரை இழுத்துச் சென்ற நிலையில், தேரை நகர்த்தப் பயன்படுத்தும் அடைப்புக் கட்டை உடைந்ததால், தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. உடைந்த அடைப்புக் கட்டை சரி செய்யப்பட்டு, நேற்று மாலை 3:00 மணிக்கு மீண்டும் தேரோட்டம் துவங்கி, தேர் நிலைக்கு வந்தது.

