/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மணல் ஏற்றி வந்த லாரியை மறித்தவர் லாரி மோதி பலி
/
மணல் ஏற்றி வந்த லாரியை மறித்தவர் லாரி மோதி பலி
ADDED : ஆக 13, 2024 11:34 PM
லால்குடி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன்குறிச்சியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 36; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் தன் பைக்கில் சென்றார்.
தச்சன்குறிச்சி அருகே காட்டேரி பாலத்தில் திடீரென தன், டூ - வீலரை நிறுத்தி, அவ்வழியே 'எம்.சாண்ட்' ஏற்றி வந்த லாரியை மறித்தார்.
இதை எதிர்பாராத லாரி டிரைவர் பிரேக் போட்டதும், லாரி நிற்காமல் சாலையில் வழிமறித்து நின்ற ராஜ்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதை பார்த்தவர்கள், பைக்கில் லாரியை விரட்டினர். லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.
காணக்கிளியநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.