/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கழிப்பறைக்கு தோண்டிய குழியில் கிடைத்த கற்சிலை
/
கழிப்பறைக்கு தோண்டிய குழியில் கிடைத்த கற்சிலை
ADDED : செப் 13, 2024 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லால்குடி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, புதுார் பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வானத்திரையான் பாளையம் கிராமத்தில், பஞ்சாயத்து சார்பில், பொதுக்கழிப்பறை கட்டுவதற்காக குழி தோண்டினர்.
அக்குழியில், கற்சிலை இருந்ததைக் கண்ட தொழிலாளர்கள், வி.ஏ.ஓ., பாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
வி.ஏ.ஓ., இரண்டரை அடி உயரம் கொண்ட பெண் தெய்வத்தின் கற்சிலையை மீட்டார். அந்த சிலையை, தொல்பொருள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

