/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்தில் சுற்றியவர் கைது
/
நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்தில் சுற்றியவர் கைது
ADDED : மே 03, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, தென்புறநாடு ஊராட்சி, பச்சைமலை பகுதியில், மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவின்படி, துறையூர் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வன அலுவலர்கள், ரோந்து சென்றனர்.
அப்போது, காப்புக் காட்டு பகுதியில், நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், பச்சைமலை கருவங்காடு பகுதி லட்சுமணன், 42 என்பதும், உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியுடன் காப்பு காட்டுப்பகுதியில் அத்துமீறி நுழைந்து, வேட்டையாட முயன்றதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர், அவரிடம் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.