/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ரயில் பாதையில் ஆண் குழந்தை கண்டெடுப்பு
/
ரயில் பாதையில் ஆண் குழந்தை கண்டெடுப்பு
ADDED : மே 28, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : திருச்சி தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்மு, 23, வளர்மதி, 38. இவர்கள் இருவரும் தேவதானம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே கிடக்கும் பொருட்களை சேகரித்து கொண்டிருந்தபோது, குழந்தை அழும் சத்தம் கேட்டது.
இருவரும் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன, ஆண் குழந்தை, துணியில் சுற்றி கீழே கிடத்தப்பட்டிருந்தது. குழந்தையை துாக்கிய பெண்கள், கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சைல்டுலைன் அமைப்பினரிடம் குழந்தையை ஒப்படைத்து, மருத்துவ கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தனர்.
குழந்தையை ரயில் பாதை அருகே வீசிச் சென்ற தாய் குறித்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.