/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தஞ்சையில் மே 2ல் முற்றுகை போராட்டம்
/
தஞ்சையில் மே 2ல் முற்றுகை போராட்டம்
ADDED : ஏப் 26, 2024 01:40 AM
திருச்சி:திருச்சியில், நேற்று, ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேகதாது அணை கட்ட வலியுறுத்திய கர்நாடகா அரசுக்கு எதிராக, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற முன் வராமல், தமிழக முதல்வர் ஸ்டாலின் மவுனம் காத்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
காவிரி ஆற்று நீரை நம்பி, தமிழகத்தில் 22 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. மேகதாது அணை விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பதால், தமிழகத்துக்கான காவிரி உரிமையை மீண்டும் பறிகொடுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் தான் பல்வேறு காவிரி உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தமிழக அரசின் மீது, தமிழக விவசாயிகள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி, மே 2ம் தேதி, தஞ்சையில் உள்ள கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும், மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து, பூம்புகார் முதல் மேகதாது வரை, விவசாயிகள் நடைபயணம் மேற்கொள்ளப்படும்.
அந்த நடைபயணத்தில், ஒரு லட்சம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மனு அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

