/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
வாலிபர் கொலை வழக்கு முக்கிய குற்றவாளி சரண்
/
வாலிபர் கொலை வழக்கு முக்கிய குற்றவாளி சரண்
ADDED : மே 04, 2024 01:39 AM
திருச்சி,:திருச்சி, அரியமங்கலம் அருகே திடீர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், 32; அ.தி.மு.க., முன்னாள் பகுதி செயலர் கேபிள் சேகரின் மகன். கடந்த, 2011ம் ஆண்டு சேகர், தன் அண்ணன் மகன்களால், சொத்து பிரச்னை முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிக்கு பழியாக கடந்த, 2021ல், சேகரின் அண்ணன் பெரியசாமி மகன் சிலம்பரசனை, முத்துக்குமாரும், அவரது நண்பர்களும் கொலை செய்தனர். மூன்று நாட்களுக்கு முன், முத்துக்குமார், தஞ்சை பைபாஸ் ரோட்டில், அரியமங்கலம் கடையில் நின்றபோது, சிலம்பரசன் சகோதரர் லோகநாதன், 31, மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் முத்துக்குமாரை வெட்டி கொலை செய்தனர்.
இந்த வழக்கில், லோகநாதன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பிரசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கொலைக்கு மூளையாக செயல்பட்ட, திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதி ரவுடி முபாரக், நேற்று காலை ஜே.எம்., 6 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.