/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி மாநகராட்சியுடன் இணைய தாயனுார் கிராம மக்கள் எதிர்ப்பு
/
திருச்சி மாநகராட்சியுடன் இணைய தாயனுார் கிராம மக்கள் எதிர்ப்பு
திருச்சி மாநகராட்சியுடன் இணைய தாயனுார் கிராம மக்கள் எதிர்ப்பு
திருச்சி மாநகராட்சியுடன் இணைய தாயனுார் கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 10, 2024 07:36 AM

தாயனுார் : திருச்சி அருகே தாயனுார் கிராமத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைத்தால், எங்களின் அனைத்து உரிமைகளும், சலுகைகளும், 100 நாள் வேலை திட்டமும் பறிபோகும். அதிக நிதி சுமை ஏற்படும். அதனால், எங்கள் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும்' என்றனர். போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் அவர்களிடம் பேச்சு நடத்தி, மறியலை கைவிட வைத்தனர். பின், கலெக்டரிடம் மனு அளித்து சென்றனர்.
அண்மையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, 'விருப்பப்படும் கிராமங்கள் மட்டுமே மாநகராட்சியுடன் இணைக்கப்படும்' என்று அறிவித்திருந்தார். எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை என்பதால், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.