/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருநங்கை புகாரை வாங்க மறுத்த பெண் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
/
திருநங்கை புகாரை வாங்க மறுத்த பெண் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
திருநங்கை புகாரை வாங்க மறுத்த பெண் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
திருநங்கை புகாரை வாங்க மறுத்த பெண் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 23, 2024 02:45 AM
திருச்சி:திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த, 32 வயது திருநங்கை, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தனி சிறையில் அடைக்கப்பட்ட திருநங்கைக்கு, சிறைத்துறை ஏட்டு மாரீஸ்வரன் பல நாட்கள் பாலியல் தொல்லை கொடுத்தார். புகாரின் படி, ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்த திருநங்கை, தனக்கு சிறையில் நேர்ந்த கொடுமை குறித்து, கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க சென்றார்.
அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த அம்சவேணி, புகாரை வாங்க மறுத்தார். இதையடுத்து, சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி விசாரணை நடத்தியதை அடுத்து, பெண் இன்ஸ்பெக்டர் அம்சவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அந்த நபர் திருநங்கை தானா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.