ADDED : மார் 09, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர்கள் ஹரிஷ், 25, ஹரிஹரன், 25. இரட்டைச் சகோதரர்களான இருவரும், கடந்த 2ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமியரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்தனர்.
பெற்றோர், புகாரின்படி, முசிறி அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்கு அழைத்துச் சென்றபோது, தப்பிக்க முயன்ற இருவரும் திருச்சி - நாமக்கல் சாலையில், செவந்தலிங்கபுரம் பாலத்தில் இருந்து குதித்தனர். இதில் இருவருக்கும் கால்முறிவு ஏற்பட்டதால், மாவு கட்டு போட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.