/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவில் பூட்டு
/
போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவில் பூட்டு
ADDED : ஜூலை 25, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சென்னை பைபாஸ் ரோட்டில், சிறுகனுார் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. முக்கியமான சாலையில் அமைந்துள்ளதால், அடிக்கடி விபத்து புகார்கள், அடிதடி தகராறுகள் தினமும் நடக்கும். இதனால் சிறுகனுார் போலீஸ் ஸ்டேஷன் இரவு நேரங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்நிலையில், சமீப காலங்களாக, இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷன் உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு பூட்டி விட்டு, இரவுப்பணி போலீசார் உள்ளே படுத்து துாங்குகின்றனர். புகார் கொடுக்க வருபவர்கள் வந்து கதவை தட்டினாலும், பல நேரங்களில் கதவை திறப்பதில்லை.
இதனால் சென்னை பைபாஸ் சாலையில் விபத்தில் சிக்குவோர் கடும் அவதிப்படுகின்றனர்.