/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மகளுக்கு பாலியல் தொல்லை தாயின் 2வது கணவர் கைது
/
மகளுக்கு பாலியல் தொல்லை தாயின் 2வது கணவர் கைது
ADDED : ஜூலை 24, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 42. அதே பகுதியை சேர்ந்த, இரு பெண் குழந்தைகளின் தாயை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரின், 16 மற்றும் 13 வயது சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதில், ஒரு சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதித்தபோது, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது தெரிந்தது.
இதையடுத்து, பெருமாள் மீது, அந்த சிறுமியின் தாய், மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, பெருமாளை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.