3,000 மியான்மர் அகதிகள் மிசோரமில் இருந்து திரும்பினர்
3,000 மியான்மர் அகதிகள் மிசோரமில் இருந்து திரும்பினர்
ADDED : ஜூலை 18, 2025 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அய்ஸ்வால்: மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு உள்நாட்டு கிளர்ச்சிப் படை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனால், மியான்மரின் எல்லையையொட்டி அமைந்துள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், மியான்மர் அகதிகளின், 'பயோமெட்ரிக்' எனப்படும், விரல் ரேகை, கருவிழி பதிவு மக்கள் தொகை விபரங்களை சேகரிக்க மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் அச்சத்தில் இருந்த மியான்மர் அகதிகள், நாடு திரும்பத் துவங்கி உள்ளனர்.
குறிப்பாக ஜோகாவ்தர் கிராமத்தில் தஞ்சம் புகுந்த 2,923 அகதிகளும், வபாயில் தங்கியிருந்த 39 பேரும் தங்கள் கிராமங்களுக்கு திரும்பிஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.