/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
'யூடியூப்' சேனல் நிர்வாகி கைது பெண் போலீசார் குழு மகிழ்ச்சி
/
'யூடியூப்' சேனல் நிர்வாகி கைது பெண் போலீசார் குழு மகிழ்ச்சி
'யூடியூப்' சேனல் நிர்வாகி கைது பெண் போலீசார் குழு மகிழ்ச்சி
'யூடியூப்' சேனல் நிர்வாகி கைது பெண் போலீசார் குழு மகிழ்ச்சி
ADDED : மே 14, 2024 07:59 PM
திருச்சி:தமிழக பெண் போலீசார் பற்றி தரக்குறைவாகவும், அவதுாறாகவும், 'ரெட்பிக்ஸ்' என்ற, 'யூடியூப்' சேனலுக்கு, 'சவுக்கு' சங்கர் பேட்டி அளித்ததாக கூறி, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், முசிறி பெண் டி.எஸ்.பி., யாஸ்மின் என்பவர், சவுக்கு சங்கரின் பேட்டியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் படி, சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீதும், அவரை பேட்டி எடுத்த, ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்தனர். கடந்த சனிக்கிழமை அவர் டில்லியில் கைது செய்து, நேற்று முன்தினம் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பெலிக்ஸ் ஜெரால்டு டில்லியில் கைது முதல், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டது வரை, முழுக்க முழுக்க பெண் போலீசாரையே, திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் ஈடுபடுத்தி உள்ளார். பெண் போலீசாரின் பணி சிரமங்களை, பெலிக்ஸ் அறிந்து கொள்ளும் விதமாக, எஸ்.பி., இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி எஸ்.பி.,யின் இந்த நடவடிக்கையால், பெண் போலீசார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

