/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மாணவியிடம் அநாகரிகமாக பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட்
/
மாணவியிடம் அநாகரிகமாக பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட்
ADDED : ஆக 24, 2024 01:56 AM
திருச்சி:திருச்சி, புத்துார் நான்கு பிரிவு சாலையில், பிஷப் ஹீபர் அரசு உதவி பெறும் கல்லுாரி செயல்படுகிறது. இங்கு, தமிழ்செல்வன், 50, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர், அதே துறையில் படிக்கும் மாணவியிடம் அவதுாறாக, இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவி, இதை சக மாணவ --- மாணவியரிடம் கூற, அவர்கள் கல்லுாரி நிர்வாகத்தில் புகார் செய்தனர்.
அத்துடன், சமூக வலைதளங்களில் இது குறித்து கடும் விமர்சனங்களையும் பதிவு செய்தனர். இதையடுத்து கல்லுாரி நிர்வாகம், தமிழ்செல்வனை சஸ்பெண்ட் செய்தது.
இதில் திருப்தி அடையாத மாணவர்கள், அவர் மீது போலீசில் புகார் அளித்து, சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்லுாரி நிர்வாகத்திடம் கோரி வருகின்றனர்.

