/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ரயிலில் ரூ.1.76 கோடி நகைகள் பறிமுதல்
/
ரயிலில் ரூ.1.76 கோடி நகைகள் பறிமுதல்
ADDED : ஆக 26, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை, 12:30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது.
இந்த ரயிலில், திருச்சி ரயில்வே போலீசார் விழுப்புரத்துக்கு பயணம் செய்த வரதராஜன், 49, என்பவரை விசாரித்தனர். ஆவணங்கள் இன்றி, அவரிடம் இருந்த, 1.76 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் மற்றும் தங்க நகைகள், 4 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவை சென்னை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

