/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ரூ. 265.44 கோடி மதிப்பு போதை பொருட்கள் அழிப்பு
/
ரூ. 265.44 கோடி மதிப்பு போதை பொருட்கள் அழிப்பு
ADDED : ஆக 30, 2024 03:08 AM

திருச்சி,:திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட, 265.44 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை, அரியலுார் சிமென்ட் ஆலையில் எரித்து அழிக்கப்பட்டது.
திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகளால் விமான நிலையங்களில், சாலை வழிகளில் கடத்தி வரப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள், புகையிலைப் பொருட்கள், திருச்சி அலுவலகத்தில் உள்ள கோடவுனில் வைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட 16.800 கிலோ கஞ்சா, 4730 கிலோ ஹாசிஸ் ஆயில், 23.420 கிலோ குடோ பெட்ரின், 30 கிலோ மெத்தாம்பெட்டமைன், 149 கிலோ ஹாசிஸ் ஆகிய போதை பொருட்கள், நேற்று அரியலுார் மாவட்டம், ரெட்டிபாளையத்தில் உள்ள அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையின் பர்னஸ் தீயில் எரித்து அழிக்கப்பட்டது.
இதன் மதிப்பு, 265.44 கோடி ரூபாய். இதுதவிர, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட சிகரெட் பெட்டிகள், குங்குமப்பூ, எலெக்ட்ரானிக் சிகரெட், கசகசா, சோமாட்ரேபின் ஊசி மருந்துகளும் நேற்று அழிக்கப்பட்டன.