/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
லஞ்சம் வாங்கிய 4 போலீசார் 'சஸ்பெண்ட்' செய்தார் எஸ்.பி.,
/
லஞ்சம் வாங்கிய 4 போலீசார் 'சஸ்பெண்ட்' செய்தார் எஸ்.பி.,
லஞ்சம் வாங்கிய 4 போலீசார் 'சஸ்பெண்ட்' செய்தார் எஸ்.பி.,
லஞ்சம் வாங்கிய 4 போலீசார் 'சஸ்பெண்ட்' செய்தார் எஸ்.பி.,
ADDED : ஆக 17, 2024 01:43 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், வளநாடு பகுதியில் சில நாட்களுக்கு முன், ஏர்கன் எனப்படும் நாட்டுத்துப்பாக்கி வைத்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பறவைகளை வேட்டையாடச் சென்றனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.பி., தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து, துப்பாக்கியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி, 1.25 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள், திருச்சி எஸ்.பி., வருண்குமாரிடம் புகார் அளித்தனர். விசாரணையில், போலீசார் லஞ்சம் வாங்கி பிரித்துக் கொண்டது தெரியவந்தது. எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ., லியோ ரஞ்சித், போலீசார் ஷாகுல் ஹமீது, வீரபாண்டி, மணிகண்டன் ஆகிய நால்வரையும்
'சஸ்பெண்ட்' செய்து, நேற்று முன்தினம் எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன், முக்கொம்பு சுற்றுலா தலத்தில் காதலனுடன் வந்த இளம்பெண்ணை மிரட்டியதாக எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ., உட்பட போலீசார் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

