/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பள்ளத்தில் கவிழ்ந்த கார் தம்பதி உட்பட மூவர் பலி
/
பள்ளத்தில் கவிழ்ந்த கார் தம்பதி உட்பட மூவர் பலி
ADDED : ஏப் 25, 2024 02:24 AM
திருச்சி:திருச்சி, கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, 57. இவரது மனைவி விஜயலட்சுமி, 51. இவர், மணப்பாறை யூனியன் அலுவலகத்தில் ஓவர்சீயராக பணியாற்றி வந்தார். கோபியின் சகோதரர், திருச்சி, சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கண்ணன், 47.
இவர்கள் மூவரும், நேற்று காலை 'பியட்' காரில், சிவகாசிக்கு உறவினர் வீட்டுக்கு செல்ல புறப்பட்டனர். காரை கோபி ஓட்டினார். காலை 9.30 மணிக்கு திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், யாகபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், தலையில் படுகாயமடைந்த விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயம் அடைந்த கோபியும், அவரது சகோதரர் கண்ணனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

