/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மறு நடவு செய்ததால் துளிர் விட்ட மரங்கள்
/
மறு நடவு செய்ததால் துளிர் விட்ட மரங்கள்
ADDED : ஜூன் 20, 2024 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடத்துக்கு எதிரே, கூடுதலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள், கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கியது.
அதற்காக, அந்த இடத்தில் இருந்த 30 ஆண்டு பழமையான மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதில், வேரோடு பிடுங்கி பல்வேறு பகுதியில் நடவு செய்யப்பட்டன.
கடந்த ஒரு மாதத்தில், புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட 24 மரங்களில், 22 மரங்கள் நன்கு துளிர்த்து, மீண்டும் உயிர் பெற்றுள்ளன.