/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று திறப்பு
/
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று திறப்பு
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று திறப்பு
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று திறப்பு
ADDED : ஜூன் 10, 2024 11:55 PM

திருச்சி : திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை, ஜன., 2ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
புதிய முனையம் பயன்பாட்டுக்கு வருவது குறித்து, திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது:
திருச்சி விமான நிலையத்தில் 75,000 சதுர மீட்டரில் அமைந்த புதிய முனையத்தில், ஆண்டுக்கு 44.5 லட்சம் பயணியரை கையாளக்கூடிய வகையில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணியர் வருகைக்கு 60 கவுன்டர்களும், புறப்பாடுக்கு 44 கவுன்டர்களும் அமைக்கப் பட்டுள்ளன.
நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற முனையம், இன்று காலை 6:00 மணி முதல், பயன்பாட்டுக்கு வருகிறது.
புதிய முனையம் திறக்கப்படும் முதல் நாள் காலை 6:40 மணிக்கு, சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் புதிய முனையத்துக்கு வருகிறது. புதிய முனையத்தில் இருந்து, 7:40 மணிக்கு பெங்களூருக்கு விமானம் புறப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.